Sub Divisions are

Nathaman ,Malaiyaman-Udayar ,

Suruthiman-Moopanar and Nainar are Called Parkavakulam.

All Are Mostly Land Lords In their Villages with Agricultural Base.

In Tamilnadu Spread Over In All Districts.

Majority Lives In Tanjore,Perambalur,Salem,Ramnad,Pudukottai,Madurai & Trichy.

சட்டசபை தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சியுடன் யாதவ மகாசபை கட்சி தலைவர் தேவநாதன், சமூக சமத்துவ படை கட்சி தலைவர் சிவகாமி, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், தமிழ்நாடு வாணிய செட்டியார் பேரவை கட்சி தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார்கள்.

இந்த கூட்டணிக்கு இந்திய ஜனநாயக முன்னணி என்று பெயரிடப்பட்டுள்ளது. அசோக்நகரில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி அலுவலகத்தில் தலைவர் பாரிவேந்தர் தலைமையில் இக்கூட்டணியினர் ஒன்றாக கூடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பாரிவேந்தர் கூறுகையில், எங்கள் அணியில் 234 தொகுதியிலும் போட்டியிடுகிறோம். இதில் இந்திய ஜனநாயக கட்சி 123 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கும் 23 தொகுதிகள் எங்கள் அணியில் பிரித்து கொடுக்கப்படும்.

இதேபோல் யாதவ மகா சபை கட்சி 88 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்து கிறது. இதில் ஜான்பாண்டி யனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகமும் தொகுதிகளில் பகிர்ந்து வேட்பாளர்களை நிறுத்த உள்ளது. 10 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த உள் ளோம். ஒரே மேடையில் நாங்கள் பேசுவோம்.

இவ்வாறு பாரிவேந்தர் கூறினார்.

பின்னர் இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடும் 123 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாரிவேந்தர் அறிவித்தார். எழும்பூர் - ஆர்.சுந்தர மூர்த்தி, கொளத்தூர் -ஆர்.சண்முகம், திரு.வி.க.நகர் -அஜிதா, ஆர்.கே.நகர் - ஜேசு, ராயபுரம் - ராமச்சந்திரன், விருகம்பாக்கம் - லதா, சைதாப்பேட்டை - ஆரூர் சுந்தரம், மயிலாப்பூர் - பிரியதர் ஷினி, வேளச்சேரி சேஷாத்திரி, சோழிங்கநல்லூர் - சிங்கராஜ், ஸ்ரீபெரும்புதூர் - சுரேஷ், தாம்பரம்-ராஜூ, செங்கல்பட்டு - எஸ்.முத்தமிழ் செல்வன், திருப்போரூர் - சிவசுப்பிரமணியம், செய்யூர் - முருகன், மதுராந்தகம் - சிவநேசன், பொன்னேரி - கோதண்டபாணி, பூந்தமல்லி - தேன்மதி,

மதுரவாயல் - சிவசங்கரன், திருவாரூர் - ஏ.ராஜேந்திரன், ஸ்ரீரங்கம் - வி.தமிழரசி உள்பட 123 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது. இலவசங்கள் கொடுத்து மக்கள் வரிப்பணம் வீணா வதை தடுப்போம் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதேபோல் சமூக சமத்துவ படை கட்சி தலைவர் சிவகாமியும் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை இந்த கூட்டத்தில் வெளியிட்டார்.

அதில் சமச்சீர் கல்வி மூலம் சேரிதோறும் பள்ளி - நூலகங்களை உருவாக்கி கல்வியில் முன்னேற்றம், வேலை வாய்ப்பை கொண்டு வருவோம் என்று கூறப்பட்டுள்ளது. பேட்டியின்போது கோவை தம்பி, ராஜன், ஜெயசீலன் உடனிருந்தனர்

0 comments:

 
Top